• Home  
  • அருள்மிகு சென்றாயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
- Dindigul

அருள்மிகு சென்றாயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

வத்தலகுண்டு – அருள்மிகு சென்றாயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அமைந்துள்ள Dinamalar வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு சென்றாயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா பக்திப் பெருக்குடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மலையின் மேல் அமைந்துள்ள இப்பழமையான கோயிலில் முழுமையான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மூலஸ்தானம், கோபுர விமானம் மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்டவை கற்களால் அழகுறக் கட்டமைக்கப்பட்டுள்ளன.

மரத்தாலான உருவச் சிலையுடன் பல நூற்றாண்டு காலத் பாரம்பரியம் கொண்ட இக்கோயிலின் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, மூன்று நாட்களாகச் சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. புனித நீர்க்குட ஊர்வலம்: விழாவின் முக்கிய நாளான அன்று அதிகாலையில் புனித நீர்க்குட ஊர்வலம் புறப்பட்டு, கோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வானம் பிளக்கும் "கோவிந்தா... கோவிந்தா..." கோஷங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.