விருதுநகரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மாவட்டப் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ்கனி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தேர்தலில் கட்சிகள் இணைந்து உழைத்ததாலேயே வெற்றி சாத்தியமானது. எனவே, "ஒருவரால் தான் மற்றொருவர் வென்றார்" என்றோ, "யாரும் தனியாக நிற்க முடியாது" என்றோ தனிப்பட்ட முறையில் பிரித்துப் பேசுவது சரியாக இருக்காது என்று தெரிவித்தார். விருதுநகரில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான சுமாராக நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வக்பு சொத்துக்கள் சட்டப் போராட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருவாய்த்துறை ஆவணங்களில் மாற்றப்பட்டுள்ளன. அதனை முழுமையாகக் கையகப்படுத்த மாவட்ட ஆட்சியரிடமும் காவல்துறையிடமும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
பரந்தூரில் விவசாயிகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று இடத்தைத் தேர்வு செய்து புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மகளிருக்கு ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது என்றும், வரும் காலங்களில் இதன் வருமான உச்சவரம்பை உயர்த்தக் கோரிக்கை வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- Virudhunagar
கூட்டணியில் தனித்து பேசக் கூடாது: நவாஸ்கனி
கூட்டணியில் தனித்து பேசக் கூடாது: நவாஸ்கனி
