• Home  
  • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Virudhunagar

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 641 மனுக்கள் பெறப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று மனுக்களைப் பெற்று விசாரித்தார். பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து தீர்வு காணவும் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி சமையலராகப் பணியாற்றி காலமான பால்ராஜ் என்பவரின் வாரிசுதாரர் பிரபாகரனுக்கு, சுந்தரராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பதிவுரு எழுத்தருக்கான கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா. ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.