தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய புகழ்பெற்ற பட்டிமன்றப் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் உடல், மதுரை ஆரப்பாளையம் அடுத்துள்ள ஞானஒளிபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு அஞ்சலிக்காகக் கொண்டு செல்லப்படுகிறது.
மதுரை ஞானஒளிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்னும் சற்று நேரத்தில் சாலமன் பாப்பையா அவர்களின் உடல் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அங்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
பட்டிமன்ற மேடைகள் மூலம் தமிழை உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழறிஞரான சாலமன் பாப்பையா, தனது உடல் மறைவுக்குப் பிறகு எரிக்கப்பட வேண்டும் என்று தனது உறவினர்களிடம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி, அவரது விருப்பப்படியே நாளை மதியம் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இலக்கிய உலகிற்கும் பட்டிமன்ற மேடைகளுக்கும் அவர் ஆற்றிய உன்னதமான தொண்டு தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- Madurai
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா – நாளை இறுதிச்சடங்கு
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உடல் – நாளை தத்தனேரி மயானத்தில் இறுதிச்சடங்கு
