• Home  
  • KGHSS மாணவிகள் – போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி
- Virudhunagar

KGHSS மாணவிகள் – போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி

KGHSS மாணவிகள் பங்கேற்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவிழிப்புணர்வுப் பேரணியைப் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி அமுதா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, தெற்கு ரத வீதி, தெப்பம் தெற்கு பஜார் மற்றும் நகராட்சி சாலை வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதன் ஆபத்துகள் பற்றியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவிகள் துண்டுப் பிரசுரங்களை வழங்கியதுடன், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கைகளில் ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றனர்.

சமூக நலன் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை முன்னெடுத்து நடத்தப்பட்ட இப்போராட்டத்தில், பள்ளி ஆசிரியர்களும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகளும் திரளாகக் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.