Tuesday, 15 September 2026

Contact Info

  • Email: mail@barnmedia.in

  • Home  
  • சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை செலுத்துவது குறித்து ஆலோசனை
- Madurai

சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை செலுத்துவது குறித்து ஆலோசனை

மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை செலுத்துவது குறித்து ஆலோசனை – அமைச்சர் நிர்மல்குமார்

மறைந்த பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா உடலுக்குத் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நிர்மல்குமார் நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், அவரது மறைவு தமிழுக்கும் மதுரைக்கும் மிகப்பெரிய இழப்பு எனத் தெரிவித்தார்.

மதுரை ஞானஒளிபுரத்தில் உள்ள மறைந்த சாலமன் பாப்பையா அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்த தமிழக அமைச்சர் நிர்மல்குமார், அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சாலமன் பாப்பையாவின் தமிழ்ச்சேவை பல தலைமுறைகளைக் கடந்து என்றென்றும் நிலைத்து நிற்கும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவரது மறைவு தமிழுக்கும், குறிப்பாக மதுரை மண்ணுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு என்றார்.

மேலும், மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை செலுத்துவது குறித்துத் தீவிரமாகப் பேசி வருவதாகவும், இது தொடர்பாக விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.