சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் குருபூஜை மற்றும் நினைவு தினம் விருதுநகரில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் அனுசரிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ஆம் நாள் அனுசரிக்கப்படும் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் குருபூஜை மற்றும் நினைவு நாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திலும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மகேந்திரன் அலுவலகம் முன்பு இதற்கான சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவப் படத்திற்குப் பலதரப்பட்ட தரப்பினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் தவெக சார்பில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் பி.செல்வம், நகரச் செயலாளர் ரசிக்குமார் மற்றும் கட்சித் தொண்டர்களும், தி.மு.க. சார்பில் நகர்மன்றத் தலைவர் மாதவன், நகரச் செயலாளர் தனபாலன் மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
மேலும், அ.தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் வெங்கடேஷ், தே.மு.தி.க. சார்பில் நகரச் செயலாளர் ஏங்கல்ஸ் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும், நகர்மன்ற உறுப்பினர்கள், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு தியாகியின் திருவுருவப் படத்திற்கு மலர் மலஞ்சலி செலுத்தினர்.
- Virudhunagar
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்
தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை மற்றும் நினைவு தினம்
