Tuesday, 15 September 2026

Contact Info

  • Email: mail@barnmedia.in

  • Home  
  • மதுரையில் முதலமைச்சரைக் கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- Madurai

மதுரையில் முதலமைச்சரைக் கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மதுரையில் மு.க.ஸ்டாலின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திய முதலமைச்சரைக் கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மிசா காலகட்டத் தியாகம் குறித்துச் சட்டமன்றத்தில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, தமிழக முதலமைச்சரைக் கண்டித்து மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் கோ.தளபதி மற்றும் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இ்ப்போரட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

மிசா சிறைவாசத்தின் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அனுபவித்த கடுமையான துன்புறுத்தல்களையும் அவரது தியாகத்தையும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதைக் கண்டித்து, தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும், தியாகங்களை அவமதிக்கும் செயல்களை எதிர்த்துத் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.