• Home  
  • பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருப்பாவாடை திவ்ய சேவை
- Madurai

பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருப்பாவாடை திவ்ய சேவை

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருப்பாவாடை திவ்ய சேவை

புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கியுள்ள நிலையில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தெற்கு கிருஷ்ணன் கோவில் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் திருப்பாவாடை திவ்ய சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.

புரட்டாசி 1-ஆம் தேதியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில், கோவிலின் சன்னதி எதிரே 50 படி (80 கிலோ) புளியோதரை சாதத்தைக் கொண்டு பெருமாளின் திருவுருவம் மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டது.

இத்திருப்பாவாடை சேவையில் முறுக்கு, வடை, லட்டு, ரவா லட்டு, அதிரசம் உள்ளிட்ட பதார்த்தங்கள் ஒவ்வொன்றும் 300 எண்ணிக்கையிலும், 5 கிலோ வெண்ணெய், 25 கிலோ துளசி, உலர் திராட்சை, முந்திரி, எள்ளுருண்டை மற்றும் ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களும் பயன்படுத்தப்பட்டன. மேலும், கதம்பம், கனகாம்பரம் உள்ளிட்ட பலவண்ண மலர்களைக் கொண்டு மொத்தம் 24 அடி நீளத்தில் பிரம்மாண்டமான முறையில் பெருமாளின் வடிவம் கண்கவர் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனையும் கற்பூர ஆரத்தியும் காட்டப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. 'கோவிந்தா' நாமம் முழங்க ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளைச் தரிசித்தனர். அதனைத் தொடர்ந்து 80 படி அரிசியில் தயாரிக்கப்பட்ட புளியோதரை சாதம் மற்றும் பட்சணங்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டன.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.