விருதுநகர் க்ஷத்திரிய மகளிர் பள்ளிகளின் நிர்வாகத்திற்குப் பாத்தியப்பட்ட க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 116-வது ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி செயலாளர் மதன் தலைமை தாங்கினார். அக்கல்லூரியின் இணைச் செயலாளர் திருமதி இனிமையும், பள்ளியின் முன்னாள் மாணவியும் சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையருமான திருமதி திவ்யபாரதியும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேல்நிலை மற்றும் இடைநிலைப் பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பதக்கங்களையும் பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவிகளுக்குப் பள்ளிச் செயலாளர் ரத்தினவேல் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் பள்ளியின் புரவலர் திராவிட மணி, தலைவர் பாலாஜி, செயலாளர் ரத்தினவேல், உப தலைவர் ரம்யா, இணைச் செயலாளர் ஹரிஹர பாலாஜி மற்றும் பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா மற்றும் ஆசிரியைகள் இணைந்து விழாவுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
- Virudhunagar
க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 116-வது ஆண்டு விழா
விருதுநகர் க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 116-வது ஆண்டு விழா
