மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டாள்புரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி கோயிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் நிறைவுபெற்று மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
பழங்காநத்தம், குலமங்கலம், எர்ரம்பட்டி, ஆவியூர், அரசகுலம், கம்பம் மற்றும் புதுப்பட்டி ஆகிய ஆறு ஊர்களைச் சேர்ந்த பங்காளிகளுக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில், ஆகம விதிமுறைகளின்படி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.
யாகசாலையில் வைத்து சிறப்பாகப் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் கோபுரங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து ஆன்மிகப் பேறு பெற்றனர்.
- Madurai
ஸ்ரீ அங்காள ஈஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேக விழா
ஸ்ரீ அங்காள ஈஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேக விழா
