• Home  
  • ஓணம் பண்டிகையை – பூக்களின் விலையில் சரிவு – வியாபாரிகள் கவலை
- Dindigul

ஓணம் பண்டிகையை – பூக்களின் விலையில் சரிவு – வியாபாரிகள் கவலை

ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் விலையில் சரிவு – வியாபாரிகள் கவலை

கேரளாவில் ஓணம் பண்டிகை மற்றும் தொடர் முகூர்த்தங்கள் வரவுள்ள நிலையிலும், திண்டுக்கல் பூச்சந்தையில் பூக்களின் வரத்து குறைந்து விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் திண்டுக்கல் மலர் சந்தையில் இருந்து கேரளா மற்றும் பிற வெளிமாநிலங்களுக்குத் தினமும் சுமார் 30 டன் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு மழை இல்லாததকারணம் பூக்களின் வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தினசரி சுமார் 10 முதல் 15 டன் அளவிலான பூக்கள் மட்டுமே கேரளாவிற்கு அனுப்பப்படுகின்றன. வாடாமல்லி ரூ.60 முதல் ரூ.80 வரையிலும், மஞ்சள் செண்டுமல்லி ரூ.100-க்கும், மல்லிகை ரூ.700 முதல் ரூ.1200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

முல்லை மற்றும் சாதிமல்லி தலா ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், ரோஜா ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்கப்படுகின்றன.

பண்டிகைக் காலம் நெருங்கும் வேளையிலும் எதிர்பார்த்த அளவு விற்பனையும் விலையும் கிடைக்காததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.