• Home  
  • மதுரையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி
- Madurai

மதுரையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி

மதுரையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி

மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகியின் இல்லத்திற்கு வருகை தந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேட்டி அளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இது தொகுதி மக்களுக்குச் செய்யும் அநீதி எனவும் அவர் வன்மையாகக் கண்டனம் தெரிவித்தார். மேலும், ராஜினாமா செய்பவர்களுக்கு இடைத்தேர்தலில் சீட் வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு முறையான கட்டமைப்பு இல்லாததால் அதிகாரிகள் கொடுப்பதை வாசித்துவிடுவதாகவும், மாநில சட்டமன்றத்தில் பேசியதே அரசின் இறுதி நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்குவதற்குப் பதிலாக, அந்தத் திட்டத்திற்கு மாற்றாக மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கலாம் எனத் தனது யோசனையைத் தெரிவித்தார்.

கூட்டணி கணக்குகள், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மற்றும் நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் விரிவாகப் பதிலளித்தார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.