• Home  
  • மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற பிட்டுக்கு மண் சுமந்த லீலை
- Madurai

மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற பிட்டுக்கு மண் சுமந்த லீலை

மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற பிட்டுக்கு மண் சுமந்த லீலை

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'பிட்டுக்கு மண் சுமந்த லீலை' ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு பகுதியில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆவணி மூலத் திருவிழாவின் சிறப்பம்சமாக, சுந்தரேசுவரர் சுவாமி தங்க மண்வெட்டி மற்றும் தங்க மண்கூடையுடன் மண் சுமந்த திருக்கோலத்தில் புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, பிட்டு விற்று வந்த வந்தி மூதாட்டிக்காகச் சிவபெருமான் கூலியாளாக வந்து மண் சுமந்த புராண வரலாற்றை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

இதற்கு முன்னதாக நேற்று நரியைப் பரியாக்கிய லீலை நடைபெற்ற நிலையில், ஆவணி மூலத் திருவிழாவின் தொடர்ச்சியாக நாளை விறகு விற்ற லீலையும், அதனைத் தொடர்ந்து சட்டத்தேர், சப்தாவரணம் மற்றும் தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மனம் உருகிச் சுவாமி தரிசனம் செய்தனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.