திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற சின்னகருப்பன் (70) என்ற விவசாயி மீது கார் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊட்டியில் இருந்து தேவிபட்டினம் நோக்கிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பின்னால் மோதியதில் முதியவர் தூக்கி வீசப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த விபத்து குறித்து நத்தம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Dindigul
நத்தம் அருகே கார் மோதி முதியவர் பலி
நத்தம் அருகே கார் மோதி முதியவர் பலி
