• Home  
  • தேசிய ஊட்டச்சத்து மாத விழா பேரணி
- Dindigul

தேசிய ஊட்டச்சத்து மாத விழா பேரணி

திண்டுக்கல்லில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா - 2026-ஐ முன்னிட்டு, 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணியளவில் தொடங்கிய இ்ப்போரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்பேரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு காமராஜர் பேருந்து நிலையம், பெரிய கடை வீதி, காமராஜர் சிலை, அண்ணா சிலை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழியாகச் சென்று மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகத்தையே வந்தடைந்தது.

ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த பதாகைகளைக் கைகளில் ஏந்தியவாறும், விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறும் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.