மறைந்த பிரபல தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்களுக்குத் தமிழக அரசு, அரசு மரியாதை செலுத்தத் தவறியுள்ளது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு, இதற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு அரசு மரியாதை செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினரும், தமிழ் அறிஞர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த போதிலும், இக்காலகட்டத்தில் நடிகர்களுக்கு மட்டும் அரசு மரியாதை அளிக்கப்பட்டு தமிழ் அறிஞர்கள் புறக்கணிக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
உலகெங்கும் தமிழ் புகழைப் பரப்பிய பெருமைக்குரிய சாலமன் பாப்பையாவுக்கு உரிய பெருமை சேர்க்க இந்த அரசு இதுவரை செவிமடுக்காதது மதுரை மக்கள் அனைவரையும் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், மதுரை மக்களின் சார்பாக இதற்குத் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களுக்காகவும் தமிழுக்காகவும் வாழ்ந்த ஒரு மாபெரும் தமிழறிஞருக்கு அரசு மரியாதை செய்யத் தவறிய இந்தச் செயலைத் தமிழ் மக்கள் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், உரிய மரியாதை வழங்கப்படாத இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் செல்லூர் ராஜு
- Madurai
சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை அளிக்காத அரசுக்கு கண்டனம்
மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை அளிக்காத தமிழக அரசுக்கு – செல்லூர் ராஜு கண்டனம்
