தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதைக் கண்டித்தும், கச்சத்தீவில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாரதிய இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மலைக்கோட்டை தர்மா தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் அளிக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறித் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுடன், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கச்சத்தீவில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யத் தமிழக அரசு உடனடியாகத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, கச்சத்தீவில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதிக்கக் கோரி தமிழக முதல்வருக்கு அனுப்ப வேண்டிய கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அந்நிர்வாகிகள் நேரில் வழங்கினர்.
- Dindigul
பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
