ஐந்து நாள் வேலை மற்றும் பி.எல்.ஐ. (PLI) திட்டத்தை வாபஸ் பெறக் கோரி இரண்டு முக்கிய அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்களுக்கு 5 நாட்களை மட்டுமே பணி நாட்களாக அறிவிக்க வேண்டும் என்றும், பி.எல்.ஐ. திட்டத்தை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் சாலை ரோட்டில் அமைந்துள்ள கனரா வங்கி முன்பு, கனரா வங்கி, இந்தியன் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) உள்ளிட்ட 7 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
வங்கி ஊழியர்களின் இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வங்கி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: மத்திய அரசு இந்தக் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றாவிட்டால், வரும் செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், அதற்கும் தீர்வு எட்டப்படாத பட்சத்தில் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் வங்கி ஊழியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
- Dindigul
இரண்டு அம்சக் கோரிக்கை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் & ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்
