விருதுநகர் மதுரை ரோட்டில் அமைந்துள்ள அரசு போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்துத் தொமுச (தொழிலாளர் முன்னேற்றச் சங்கம்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் வாயிற் கூட்டமும் நடைபெற்றது.
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டிப்பதுடன், தமிழக அரசின் தனியார்மயமாக்கல் போக்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மத்திய சங்கத் தலைவர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மண்டலப் பொதுச் செயலாளர் ராஜசெல்வம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கவுன்சில் செயலாளர் மாடசாமி, மத்திய சங்கப் பொருளாளர் திருவேட்டை போத்தி உள்ளிட்ட நிர்வாகிகளும், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வாயிற் கூட்டத்தில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- Virudhunagar
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தொமுச ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் & வாயிற் கூட்டம்
