தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய மறைந்த புகழ்பெற்ற தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்களின் உடல், இறுதிச் சடங்கு வழிபாடுகளுக்குப் பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுத் தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
மதுரை வெப் சர்ச்சிற்கு (Webb Church) கொண்டுவரப்பட்ட சாலமன் பாப்பையா அவர்களின் உடலுக்குத் தேவாலயத்தில் சிறப்பு இறுதிச் சடங்கு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்தனர்.
தேவாலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், மதுரை தத்தனேரி மின் மயானத்திற்கு வந்தடைந்தது. அங்குத் தகனத்திற்கு முன்னதாகத் தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை செலுத்தப்பட உள்ளது.
தமிழை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்த மாபெரும் தமிழறிஞரின் இறுதிப் பயணத்தில், திரளான இலக்கியவாதிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களின் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
- Madurai
மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் இறுதி ஊர்வலம்
மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் இறுதி ஊர்வலம்-தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம்
