மறைந்த புகழ்பெற்ற தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்களின் உடல் மதுரை வெப் சர்ச் தேவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இறுதிப் பிரார்த்தனை நடைபெற்றது.
மதுரை வெப் சர்ச்சில் நடைபெற்ற இறுதிச் சடங்கு வழிபாட்டில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க இறுதிப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மறைந்த சாலமன் பாப்பையாவுக்குத் தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டதையும், இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் பங்கேற்றதையும் சுட்டிக்காட்டி, தமிழக முதல்வர் விஜய்க்கு வெப் சர்ச் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தேவாலயத்தில் பிரார்த்தனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சாலமன் பாப்பையா அவர்களின் உடல் தத்தனேரி மின் மயானத்திற்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அரசு முழு மரியாதையுடன் அவரது தகனக் கிரியைகள் நடைபெற்று வருகின்றன. தமிழுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாபெரும் ஆளுமையின் பிரிவு தமிழ் மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Madurai
மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா இறுதிப் பிரார்த்தனை
மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா இறுதிப் பிரார்த்தனை – மதுரை வெப் சர்ச் – தமிழக முதல்வருக்கு நன்றி
