சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கண்டித்து, விருதுநகரில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு தலைமையில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னின்று நடத்திய இ்ப்போரட்டத்தில், தி.மு.க. மாவட்ட மற்றும் நகரச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பேசிய அநாகரிகமான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கடுமையான முழக்கங்களை எழுப்பினர்.
அரசியல் களத்தில் கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், சட்டமன்ற மரபுகளையும் ஜனநாயகப் பண்புகளையும் ஆட்சியாளர்கள் மதிக்கத் தவறக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
- Virudhunagar
விருதுநகரில் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சைக் கண்டித்து தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
