• Home  
  • ‘ஹார்ட் ஆஃப் மதுரை’ விழிப்புணர்வு நடைப்பயணம்
- Madurai

‘ஹார்ட் ஆஃப் மதுரை’ விழிப்புணர்வு நடைப்பயணம்

ஹார்ட் ஆஃப் மதுரை’ உலக இதய தின விழிப்புணர்வு நடைப்பயணம்

இதய ஆரோக்கியத்தின் அவசியத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் 'ஹார்ட் ஆஃப் மதுரை' எனும் பெயரில் உலக இதய தின விழிப்புணர்வு நடைப்பயணம் காந்தி அருங்காட்சியகத்தில் உற்சாகமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

காந்தி அருங்காட்சியகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை மற்றும் மருத்துவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த நடைப்பயணம் மீண்டும் அதே இடத்திலேயே நிறைவுபெற்றது.

பொதுமக்கள், குடும்பத்தினர், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் எனப் பல தரப்பினரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் டி-ஷர்ட்டுகள், பதக்கங்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.

இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் R. சிவக்குமார், விழிப்புணர்வு, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் தகுந்த நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவதன் மூலம் இதயத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மருத்துவமனையின் இயக்குநர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.