• Home  
  • TNPSC தொழில்நுட்பப் பணிகள் தேர்வு – ஆட்சியர் ஆய்வு
- Virudhunagar

TNPSC தொழில்நுட்பப் பணிகள் தேர்வு – ஆட்சியர் ஆய்வு

TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு – ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று விருதுநகரில் உள்ள 5 மையங்களில் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 461 பொறியாளர் மற்றும் தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான இத்தேர்வு, விருதுநகரில் செந்திக்குமார நாடார் கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி, கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரி ஆகிய 5 மையங்களில் நடத்தப்பட்டது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் உட்பட மொத்தம் 2,709 பேர் இத்தேர்வை எழுதத் திட்டமிடப்பட்டிருந்தனர். இருப்பினும், இன்றைய தேர்வில் 1,492 பேர் மட்டுமே கலந்துகொண்டு தேர்வு எழுதினர்; 1,217 பேர் தேர்வுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.