• Home  
  • கடலூர் எம்பி மேகதாது விவகாரம் குறித்து பேட்டி
- Madurai

கடலூர் எம்பி மேகதாது விவகாரம் குறித்து பேட்டி

கடலூர் எம்பி விஷ்ணு பிரசாத் மேகதாது விவகாரம் குறித்து பேட்டி

மேகதாது விவகாரத்தில் முதலில் குறுவை சாகுபடிக்குத் தேவையான காவிரி நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என கடலூர் காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத் மதுரையில் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு டிபிஆர் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி போன்ற எந்தவித ஒப்புதல்களையும் வழங்கக் கூடாது என்றும், 2007-ஆம் ஆண்டு தீர்ப்பாயம் மற்றும் 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு பாதகம் ஏற்படக்கூடாது என்பதே தமிழகம் மற்றும் தமிழக காங்கிரஸின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவது குற்றமோ பாவமோ அல்ல என்றாலும், உலகத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் இல்லை என்பதால் இரு மாநில முதலமைச்சர்களும் நேரில் பேசி தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி அல்லது வேறு யார் ஆட்சியில் இருந்தாலும் மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டே செயல்பட முடியும் என்றும், தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற்றுத்தர சட்டப்பூர்வமாகவும் ஜனநாயக ரீதியாகவும் தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் கூறினார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.