• Home  
  • விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து
- Virudhunagar

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து

விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்குச் சொந்தமான இந்த பட்டாசு ஆலை, சிறிய ரக பட்டாசுகள் தயாரிப்பதற்காக டி.ஆர்.ஓ. உரிமம் பெற்று இயங்கி வருகிறது. நேற்று இரவு இந்த ஆலை வளாகத்தில் கழிவுகள் மற்றும் சாம்பல் மூடைகள் இறக்கி வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தத் தீயை முழுமையாக அணைக்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று ஆலைக்குள் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக விருதுநகர் தீயணைப்புத் துறையினருக்கும் ஆமத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து வெற்றிகரமாக அணைத்தன.

அதிர்ஷ்டவசமாக விடுமுறை தினம் என்பதால் ஆலையில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.