மதுரை ரிங்ரோட்டில் தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கத்தின் 14-வது ஆண்டு விழா மாநிலத் தலைவர் திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் மற்றும் மியான்மர் நாட்டின் கவுரவ தூதர் பேராசிரியர் ரங்கநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் பாரம்பரிய உணவுத் தொழில்களைப் பாதுகாக்க பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, அப்பளத் தொழிலின் முக்கிய மூலப்பொருளான உளுந்தம் பருப்பை, மத்திய-மாநில அரசுகள் இணைந்து கூட்டுறவு அமைப்புகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களுக்கு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்க வேண்டும் என்றும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விற்பனைக்கு வரும் தரமற்ற கலர் அப்பளங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி, திண்டுக்கல் மாவட்டம் போலிமனூரில் மோர் மிளகாய் உற்பத்திக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் மற்றும் மதுரையில் ஒருங்கிணைந்த அப்பளம், வடகம், மோர் வத்தல் தொழில் வளாகம் (கிளஸ்டர்) அமைக்க வேண்டும் என்பது உள்பட மொத்தம் 6 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாநிலத் தலைவர் திருமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- Madurai
மானிய விலையில் உளுந்தம் பருப்பு வழங்கக் கோரிக்கை