திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ஆண்டியபட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாலெட்சுமி மற்றும் ஸ்ரீ கருப்புசாமி கோவில் ஆடித்திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன் விழா நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைக் செலுத்தும் நிகழ்ச்சி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. உடல்நலக் குறைவு நீங்கவும், திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டியும் அம்மனிடம் வேண்டிக்கொண்ட 30-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கோவில் முன்பு தரையில் வரிசையாக அமர வைக்கப்பட்ட பக்தர்களின் தலையில், "கோவிந்தா... கோவிந்தா..." கோஷங்கள் முழங்கப் பூசாரி தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். திண்டுக்கல் மட்டுமின்றி பழனி, தேனி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வைக் காணவும் வழிபடவும் குவிந்திருந்தனர்.
- Dindigul
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு
நத்தத்தில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு
