எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திமுகவினர் நடத்திய சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். தவெக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாநகர திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவெக அரசுக்கும் காவல் துறைக்கும் எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதேபோல், மதுரை புறநகர் திமுக சார்பில் ஒத்தக்கடை பகுதியில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக அரசுக்கு எதிராக முழக்கமிட்ட முன்னாள் அமைச்சர் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினரைக் காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தில் பேசிய திமுக நிர்வாகி ஜெயராமன், ஒரு நடிகை குறித்த பேச்சுக்கு இவ்வளவு ஆவேசப்படும் அரசு, அமைச்சர்களின் மிரட்டல் பேச்சுக்களைப் கண்டுகொள்ளாமல் பூ கொடுத்து வரவேற்பதாகக் குற்றம்சாட்டினார். இந்தத் திடீர் போராட்டங்களால் மதுரையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- Madurai
உதயநிதி ஸ்டாலின் கைது – திமுக மறியல்
உதயநிதி ஸ்டாலின் கைது – மதுரையில் திமுக மறியல்
