• Home  
  • சிவகாசியில் புதிய மருத்துவக் கட்டடங்கள் திறப்பு
- Virudhunagar

சிவகாசியில் புதிய மருத்துவக் கட்டடங்கள் திறப்பு

சிவகாசியில் புதிய மருத்துவக் கட்டடங்கள் திறப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தாய்-சேய் நலப்பிரிவுக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக இந்த புதிய கட்டடங்களை இன்று திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நேரடி விழாவில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் கீர்த்தனா கலந்துகொண்டு புதிய அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மருத்துவத் துறை உயர் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்த நவீன கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளதன் மூலம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதி மக்களுக்கு அவசர சிகிச்சை மற்றும் மகப்பேறு நலச் சேவைகள் மேம்பட்டு, ஏழை எளிய மக்களுக்குத் தரமான உயர்தர மருத்துவச் சிகிச்சை எளிதில் கிடைக்கும் என மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.