திண்டுக்கல்லில் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித செபஸ்தியார் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வினோதமான குழந்தைகள் ஏல நிகழ்வு பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
350 ஆண்டுகள் பழமை வாய்ந்த திண்டுக்கல் மாநகர் மலைக்கோட்டை பின்புறம் உள்ள முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று குழந்தைகள் ஏலம் விடும் விநாட நிகழ்வு நடைபெற்றது.
குழந்தை வரம் வேண்டியும், வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறியும் தங்களது பச்சிளம் குழந்தைகளுடன் ஆலயத்திற்கு வந்த பெற்றோர்கள், ஊர் பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் குழந்தைகளை ஏலத்தில் விட்டனர். குடும்பத்தினரும் ஊர் மக்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் குழந்தைகளை ஏலத்தில் எடுத்தனர்.
இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் முழுத் தொகையும் ஆலய நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கான அன்னதானப் பணிகளுக்கும் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியமான இந்த வேண்டுதல் நிகழ்வு அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது
- Dindigul
வினோதமான குழந்தைகள் ஏலத் திருவிழா
திண்டுக்கல்லில் வினோதமான குழந்தைகள் ஏலத் திருவிழா
