திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தலைமறைவாகியுள்ளவர்களைத் தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமடைந்துள்ளனர்.
பழனி கோவில் நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த இந்த வழக்கில், முக்கியக் குற்றவாளியான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திரம் தயாரித்துக் கொடுத்த புரோக்கரான ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
இதனை அடுத்து, ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஜெயப்பிரகாஷின் வீட்டில் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் சந்தனலட்சுமி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாகியுள்ள சார்பதிவாளர் மற்றும் புரோக்கரை இன்று மாலைக்குள் கைது செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
- Dindigul
பழனி மடம் நில மோசடி – சிபிசிஐடி தீவிரம்
பழனி மடம் நில மோசடி – சிபிசிஐடி தீவிரம்
