மதுரை காமராசர் பல்கலைக்கழக 'டி' மண்டலத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் விருதுநகர் செந்திக்குமாரநாடார் கல்லூரியில் நடைபெற்றன.
இப்போட்டிகளில் ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரி, அருப்புக்கோட்டை எஸ்பிகே கல்லூரி, சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மற்றும் விருதுநகர் செந்திக்குமாரநாடார் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
முடிவில், 48 புள்ளிகளைக் குவித்த நடத்தும் கல்லூரியான விருதுநகர் செந்திக்குமாரநாடார் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டிக் கொண்டது. 38 புள்ளிகளுடன் சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
கல்லூரி தலைவர் சம்பத்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குச் சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கிப் பாராட்டிப் பேசினார். கல்லூரி முதல்வர் சாரதி வாழ்த்துரை வழங்கிய இத்தொடரின் நிறைவு விழாவில், உடற்கல்வி இயக்குநர் முருகேசன் வரவேற்புரையாற்றினார்; 'டி' மண்டல கன்வீனர் பால்ஜீவ சிங் நன்றியுரையாற்றினார். போட்டிக்கான ஏற்பாடுகளைப் பேராசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
- Virudhunagar
மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
