மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் விருதுநகரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 28 பெண்கள் உட்பட 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உள்ள கிளைத் தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.சாராள் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகன், எல்.பி.எஃப் (LPF) நிர்வாகி மாடசாமி, ராஜசெல்வம், ஏஐடியுசி நிர்வாகி பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகளாகப் பின்வருவன வலியுறுத்தப்பட்டன:
தொழிலாளர் விரோதக் கோட்பாடான 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) வழங்க வேண்டும்.
மின்சாரம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கலைக் கைவிட வேண்டும்.
அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.
100 நாள் வேலைத் திட்டத்தை வலுப்படுத்தி, வேலை நாட்களை 200-ஆக உயர்த்துவதுடன் உரிய கூலி வழங்க வேண்டும்.
விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 28 பெண்கள் உட்பட 69 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
- Virudhunagar
மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டம்
மத்திய அரசை கண்டித்து விருதுநகரில் தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்
