தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்த "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வின் தொடர்ச்சியாக, விருதுநகர் செந்திக்குமாரநாடார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான தொடக்க விழாவைத் தொடர்ந்து, விருதுநகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
உறுதிமொழியின் முக்கிய அம்சங்கள்:
போதைப்பழக்கத்தின் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து, தான் போதைக்கு ஆளாக மாட்டோம்.
குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்தில் இருந்து பாதுகாத்து அறிவுரை வழங்குவோம்.
போதைக்கு அடிமையானவர்களை மீட்டு நல்வழிப்படுத்த முழுப் பங்களிப்பை வழங்குவோம்.
போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு மற்றும் பயன்பாட்டிற்கு எதிராகச் செயல்பட்டு தமிழ்நாட்டில் போதையை வேரறுக்க அரசுக்குத் துணை நிற்போம்.
இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் சிறந்த முறையில் போதைப்பொருள் எதிர்ப்புட்டுக் குழுக்களாகச் செயல்பட்ட 9 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளுக்கு ரூ.90,000 மதிப்பிலான பரிசுத்தொகைகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், உதவி ஆணையர் சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்
- Virudhunagar
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு – மாணவர்கள் உறுதிமொழி
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’- விருதுநகரில் மாணவர்கள் உறுதிமொழி
