விருதுநகர் வே.வ. வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பு மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து நடத்திய போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் மனிதச் சங்கிலி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகில் தொடங்கிய விழிப்புணர்வு நடைப்பயணத்தை, தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் விருதுநகர் மண்டலப் பொது மேலாளர் கண்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சே.சிந்தனா மற்றும் உதவிப் பேராசிரியர் பாலசரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளர் லதா குமாரி "போதை வேண்டாம், வாழ்க்கை வேண்டும்" என்ற விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்களிடையே எடுத்துரைத்தார். தொடர்ந்து அனைவரும் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், காவல் ஆய்வாளர்கள் பிரியா மற்றும் சந்திரன் ஆகியோர் போதைப்பொருட்களால் ஏற்படும் உடல்நலக் கேடுகள், பொருளாதார இழப்புகள் மற்றும் எதிர்கால பாதிப்புகள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் இளம் செஞ்சிலுவைச் சங்கப் பொறுப்பாசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டு, போதைப்பொருள் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்
- Virudhunagar
VVV கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்
விருதுநகர் VVV கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் & மனிதச் சங்கிலி
