விருதுநகரில் இன்று காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில், பிற்பகலில் பெய்த திடீர் மழையால் நகரில் குளிர்ந்த சூழல் நிலவியதுடன், பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் நகர் பகுதி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று பிற்பகல் திடீரெனத் தொடங்கிய மழை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கொட்டிதீர்த்தது. இந்த மழையின் காரணமாகச் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், நீண்ட நாட்களாக நிலவி வந்த கடுமையான வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது.
கோடை வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற்ற பொதுமக்களும், குறிப்பாக மானாவாரி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளும் இந்தத் திடீர் மழையால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- Virudhunagar
விருதுநகரில் பிற்பகல் திடீர் மழை
விருதுநகரில் பிற்பகல் திடீர் மழை
