மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எம்பியுமான மாணிக்கம் தாகூர், காவிரி நீரைத் திறக்கக் கோரியும், கர்நாடக பாஜகவினரின் போராட்டத்தைக் கண்டித்தும் தமிழகத் தலைவர்கள் மௌனம் காப்பது துரோகம் என்றார்.
தமிழக அரசின் பட்ஜெட் நிதிநிலை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், காவல்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
83வது சுதந்திர தின விழாவில் ராகுல் காந்தி பிரதமராகக் கொடியேற்றுவார் என்றும், அதற்குத் தவெக மற்றும் ஆதவ் அர்ஜுன் ஆதரவளிப்பார்கள் என்றும் நம்புவதாகத் தெரிவித்தார். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தாமதமாவது குறித்தும் விமர்சித்தார்.
- Madurai
மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பு
மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பு
