விளையாட்டு வீரர்களின் உடல் நலன் மற்றும் காயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல்லில் எலும்பியல் மற்றும் தடகள சங்கங்கள் இணைந்து நடத்திய மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
எம்.எஸ்.பி சோலை நாடார் விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில், வீரர்களுக்கு 7 கி.மீ தூரமும், வீராங்கனைகளுக்கு 5 கி.மீ தூரமும் நிர்ணயிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில், வெற்றி பெற்றவர்களுக்குப் பணப் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
- Dindigul
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
திண்டுக்கல்லில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
