விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சமுத்திரம் இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கினார்.
புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பில் தொழிலாளர்களுக்கு எதிரான சரத்துகளைத் திருத்தம் செய்ய வேண்டும் என்பதுடன், அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், ஏராளமான பணியாளர்களும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாகக் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
- Virudhunagar
பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
