நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.செல்வம், வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று தனது நன்றியினைத் தெரிவித்து வருகிறார்.
விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட மேல ஆமத்தூர், சேர்வைகாரன்பட்டி, மத்தியசேனை, காரிசேரி, ஆனைக்குட்டம், வடமலாபுரம் மற்றும் செங்கமலப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளுக்கு நேரில் சென்ற சட்டமன்ற உறுப்பினர், அங்குள்ள பொதுமக்களைச் சந்தித்து தமக்கு பேராதரவு தந்தமைக்காக நெகிழ்ச்சியோடு நன்றி கூறினார்.
இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
