விருதுநகருக்கு ஹவுரா - நெல்லை விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 9.5 கிலோ கஞ்சா மற்றும் 9 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விருதுநகர் ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹவுரா - நெல்லை விரைவு ரயிலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து விருதுநகர் ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பெருமாள் மற்றும் தலைமை காவலர்கள் மாரித்துரை, கருப்பசாமி, காவலர் விக்னேஷ் ஆகியோர் அந்த ரயிலின் பொதுப் பெட்டியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்றுக்கிடந்த டிராவல் பையைச் சோதித்ததில் 9.5 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது; இது ராமநாதபுரம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மற்றொரு வெள்ளை நிறச் சாக்குப்பையில் இருந்த 9 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விருதுநகர் உணவுப் பாதுகாப்புத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே காவல்துறையினர், ரயிலில் போதைப்பொருட்களைக் கடத்தி வந்தது யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Virudhunagar
ஹவுரா – நெல்லை விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
விருதுநகரில் ஹவுரா – நெல்லை விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா & புகையிலை பொருட்கள் பறிமுதல்
