• Home  
  • வெயில் உகந்த அம்மன் கோவில் குத்து விளக்கு பூஜை
- Virudhunagar

வெயில் உகந்த அம்மன் கோவில் குத்து விளக்கு பூஜை

ஆனி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான அருள்மிகு ஸ்ரீ பராசக்தி வெயில் உகந்த அம்மன் திருக்கோவிலில் குத்து விளக்கு பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

உலக நன்மை, நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், மக்கள் நோயின்றி சுபிட்சமாக வாழவும் வேண்டி இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆனி கடைசி வெள்ளிக்கிழமையில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும், நீண்ட ஆயுள் கிடைக்கும் மற்றும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஏராளமான பெண்கள் திரளாகக் கலந்துகொண்டு, குத்து விளக்கு ஏற்றி அம்மனை பக்தியுடன் வழிபட்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.