விருதுநகர் - சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் சாலை மற்றும் புதிய பாலங்கள் அமைக்கும் பணிகளை எம்பியும் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர் நேரில் ஆய்வு செய்தார்.
புல்லலக்கோட்டை ரோடு, வடமலைக்குறிச்சி ரோடு சந்திப்பு, மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை அவர் பார்வையிட்டார்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கட்சியினருடன் ஆய்வை மேற்கொண்ட அவர், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்பணிகள் அனைத்தும் இன்னும் மூன்று மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்று தெரிவித்தார்.
- Virudhunagar
சாத்தூர் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் ஆய்வு
சாத்தூர் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் ஆய்வு
