உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவிற்குக் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை மற்றும் தற்காலிக மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல ஏதுவாகப் போக்குவரத்து ஏற்பாடுகள், வழித்தடங்கள் மற்றும் வி.ஐ.பி. பிரபலங்களின் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கவுரவ்குமார், காவல் ஆணையர் ராஜேந்திரன், காவல் கண்காணிப்பாளர் தேவநாதன், மாவட்ட வருவாய் அதிகாரி அன்பழகன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை உயர் அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
- Madurai
மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா – ஆலோசனைக் கூட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா – ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
