• Home  
  • பட்டம்புதூரில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
- Virudhunagar

பட்டம்புதூரில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

பட்டம்புதூரில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூரில் இயங்கி வரும் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ஆலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் மற்றும் தயாரிப்பு இயந்திரங்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகின. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் நாசமான நிலையில், வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.