திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி வழக்கில், கைதான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகிய இருவரையும் ஒரு நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரித்துத் தகவல் பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமாராக ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் உள்பட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கைது செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்ற உத்தரவு: மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் அடிப்படையில், இருவரையும் ஒரு நாள் மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Dindigul
பழனி நிலம் – சார்பதிவாளர் & பத்திர எழுத்தரை விசாரிக்க உத்தரவு
பழனி நில மோசடி வழக்கு – சார்பதிவாளர் & பத்திர எழுத்தரை விசாரிக்க உத்தரவு
