• Home  
  • அதிமுக தெளிந்த நீரோட்டம் – முன்னாள் அமைச்சர்கள்
- Madurai

அதிமுக தெளிந்த நீரோட்டம் – முன்னாள் அமைச்சர்கள்

மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு, தமிழக முதல்வர் விஜய் மற்றும் TVK -வினரை மிகக் கடுமையாகச் சாடியுள்ளனர்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு, தமிழக முதல்வர் விஜய் மற்றும் TVK -வினரை மிகக் கடுமையாகச் சாடியுள்ளனர்.

கூட்டத்தில் பேசிய ஆர்.பி. உதயகுமார், ‘அதிமுக-வை விட்டுச் சென்றவர்கள் டயரைத் துடைக்கலாம், நக்கலாம், ஆனால் எங்களைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை.TVK-வின் ஆட்சி கானல் நீர் போன்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையப் போகிறது.TVK -வினரால் எங்கள் கட்சியின் 107 நிர்வாகிகளின் பெயர்களைக் கூடச் சொல்ல முடியாது’ எனச் சவால் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, ‘சட்டமன்றத்தை தற்போதைய அரசு சந்தைக்கடையாக மாற்றிவிட்டது. ஒரு நடிகராகப் பேசுவதற்கும், சட்டமன்றத்தில் பேசுவதற்கும் வித்தியாசம் தெரியாத முதல்வர், இளைஞர்களைப் பாழடிக்கிறார். வரி ஏய்ப்பு மற்றும் சொகுசு கார் விவகாரங்களில் முதல்வர் பதில் சொல்ல வேண்டும்’ என்று ஆவேசத்துடன் பேசினார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல தலைவர்கள் அதிமுக-வில் இருந்ததை நினைவுபடுத்திய அவர்கள், கட்சித் தொண்டர்கள் கொள்கை பிடிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தற்போதைய ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்றும் எச்சரித்தனர். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டம், தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.