மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா அவர்கள் பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
100-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர் பள்ளி மாணவிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவமனை மகப்பேறு பிரிவிலிருந்து தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மக்கள் தொகை கட்டுப்பாட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பங்கேற்பாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார்.
